பக்கங்கள்

பக்கங்கள்

18 அக்., 2020

விரைவில் புங்குடுதீவு விடுவிப்பு-யாழ்அரசாங்க அதிபர் மகேசன்

Jaffna Editor
கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, முடக்கப்பட்ட நிலையில் உள்ள புங்குடுதீவு பிரதேசம் விரைவில் விடுவிக்கப்படும் என்று, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றாளர் ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, முடக்கப்பட்ட நிலையில் உள்ள புங்குடுதீவு பிரதேசம் விரைவில் விடுவிக்கப்படும் என்று, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன், தெரிவித்துள்ளார்.

அத்துடன், யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து பொதுமக்கள் அவசியமின்றி வெளிமாவட்டங்களுக்கு பயணம் செய்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும், அவர் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், எனினும், எந்த நேரமும், தொற்று எந்த வழியிலும் ஏற்படலாம் என்ற அச்ச நிலைமை உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றைய நிலவரப்படி, யாழ்ப்பாண மாவட்டத்தில், புங்குடுதீவு பகுதி தவிர்ந்த ஏனைய பகுதிகளில், 468 குடும்பங்களைச் சேர்ந்த 1055 பேரைத் தனிமைப்படுத்தியிருப்பதாகவும், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

முன்னதாக 28 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கை, தற்போது 9 ஆக குறைந்துள்ளது என்றும் அவர் மேலும் கூறினார்