பக்கங்கள்

பக்கங்கள்

28 அக்., 2020

எம்.ஏ.சுமந்திரன் தலைமையில்அவசர சந்திப்பு

Jaffna Editor கரவெட்டி தவிசாளர் ஜங்கரன் அறிவித்துள்ள நிலையில் இ;னறு அவசர சந்திப்பு எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடந்துள்ளது.கௌரவமாக பதவி விலகப்போவதாக கரவெட்டி பிரதேச சபை தவிசாளர் ஜங்கரன் அறிவித்துள்ள நிலையில் இ;னறு அவசர சந்திப்பு எம்.ஏ.சுமந்திரன் தலைமையில் நடந்துள்ளது.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் இயங்கும் உள்ளூர் ஆட்சி சபைகளின் பாதீடுகளை நிறைவேற்றுவது தொடர்பில் வலிகாமம் மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் த. நடனேந்திரன், வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபைத் தவிசாளர் அ. ஜெபநேசன், மற்றும் கரவெட்டி பிரதேச சபைத் தவிசாளர் த. ஐங்கரன் என்போரை எம். ஏ. சுமந்திரன் இன்று சந்தித்துப் பேசியதாக எம்.ஏ.சுமந்திரன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.போதிய ஆதரவின்றி ஈபிடிபி உள்ளிட்ட தரப்புக்களுடன் சிறுபான்மை தரப்பாக ஆட்சியிலுள்ள யாழ்.மாநகரசபை உள்ளிட்டவை முடங்கலாமென எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் சந்திப்பு நடந்துள்ளது.