பக்கங்கள்

பக்கங்கள்

18 நவ., 2020

க பிரான்சில் 24 மணிநேரம் - 437 பேர் கொரோனாச்சாவு - மீண்டும் அதிகரிக்கும் கொரோனாத் தொற்று!!

www.pungudutivuswiss.com
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாத் தொற்றினால் 437 பேர் பேர் சாவடைந்துள்ளனர்.
பிரான்சில் கொரோனாத் தொற்றினால் சாவடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது நடந்த 24 மணிநேரச் சாவுகளினால் 46.273 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்திற்குள் 40.558 பேரிற்குக் கொரோனத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் 40.000 இற்கும் 60.000 இற்கும் இடையில் வேறுபட்டே வந்துள்ளது.
கொரோனாத் தொற்றானது இரண்டு மில்லியனைத் தாண்டி, மொத்தமாக 2.036.755 பேர் கொரோனத் தொற்றிற்கு உள்ளாகி உள்ளனர்.
33.500 பேர் கொரோனாத் தொற்றினால் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீவிர சிகிச்சைப் பிரிவில் 4.903 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 382 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.