பக்கங்கள்

பக்கங்கள்

16 நவ., 2020

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் 7 மாணவர்களுக்கு 200 புள்ளிகள்! - சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் சாதனை

www.pungudutivuswiss.com

2020 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் 7 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதற்கு முன்னர் கடந்த 2007 ஆண்டிலேயே இத்தகைய சாதனை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது

2020 ஆண்டுக்கான தரம் 5 புலமை பரிசில் பரிட்சை பெறுபேறுகளின்படி, கொழும்பு ஸாஹிறா கல்லூரி மாணவன் மொஹமட் பர்சான் மொஹமட் அம்மார், சிங்கள மொழி மூலம் 200 புள்ளிகள் பெற்று, சாதனை படைத்துள்ளார். இங்கு 3 மாணவர்கள் 200 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது.

2020 ஆண்டுக்கான 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின்படி,தமிழ் மொழி மூலத்தில் புத்தளம் சாஹிரா ஆரம்ப கல்லூரி மாணவி அர்ஷத் செய்னா 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.