பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2020

9 வயதுச் சிறுமி கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

www.pungudutivuswiss.com
வீட்டில் தனித்திருந்த 9 வயதுச் சிறுமி கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.  இச்சம்பவம் இன்று (30) நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் மந்திகை சாரையடி(மதுவரி திணைக்களத்திற்கு பக்கத்து ஒழுங்கை) ஸ்ரீதரன் கம்சி (வயது 9) என்ற சிறுமியே உயிரிழந்துள்ளார். சம்பவம் பற்றித் தெரியவருவதாவது,  இன்று காலை தனது மூத்த மகனுக்கு சுகயீனம் ஏற்பட்டதால் தனது 9 வயதுச் சிறுமியை வீட்டில் தனியாக இருத்தி வைத்துவிட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்து சென்று திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் யன்னல் அருகே பாடசாலை கழுத்துப் பட்டியை கழுத்தில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சிறுமியின் அருகில் யூஸ் பை ஒரு பகுதி கிடந்துள்ளது. தற்போது மரண விசாரணை அதிகாரி விசாரணை மேற்கொண்டு வருகிறார். சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை பொலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.