பக்கங்கள்

பக்கங்கள்

25 நவ., 2020

தமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் ; மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் எச்சரிக்கை

www.pungudutivuswiss.cதமிழகம், புதுச்சேரி கடலோர பகுதிகளுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.

சென்னை

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் 2 தினங்களுக்குப் பரவலாக மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இன்று மதியத்துக்கு மேல் புயல் கரையைக் கடக்கும் என்பதால் இன்று பொது விடுமுறை என முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

இதையடுத்து, சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவித்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னையில் கடற்கரையை ஒட்டிய காமராஜர் சாலை மூடப்பட்டது; எண்ணூர் விரைவு நெடுஞ்சாலையும் புயல் காரணமாக மூடப்பட்டது.

கனமழை காரணமாக சென்னை - பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரியம் பகுதியில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி! 

மக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. பொதுமக்கள், வீட்டு மாடியில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளது.

புயல், கனமழையால் ஜிஎஸ்டி , ஓஎம்ஆர் ,ஈசிஆர் சாலைகளில் போக்குவரத்தை தவிர்க்க காவல்துறை அறிவுறுத்தி உள்ளனர்.