பக்கங்கள்

பக்கங்கள்

9 நவ., 2020

முக கவசம் அணியாமல் கூட்டத்தில் பங்கேற்ற வடக்கு ஆளுநர்

Jaffna Editor
வவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் முகக்கவசம் அணியாமல் கலந்து கொண்டது பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.


வவுனியாவில் அபிவிருத்தி திட்ட கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் முகக்கவசம் அணியாமல் கலந்து கொண்டது பலத்த விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவிற்கமைய ஜனாதிபதி செயலணியின் ஒப்புதலின் கீழ் பிரதமர் அலுவலகத்தின் ஊடாக செயற்படுத்தப்படும் ´கிராமிய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தேசிய வேலைத்திட்டத்தின்´ மற்றுமொரு கட்டம் இன்று வவுனியா , மன்னார் , முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கும் வகையில் வவுனியா மாவட்ட செயலாளர் அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் முகக்கவசமின்றி கலந்து கொண்டிருந்தார்.

வரவேற்பு நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் வடக்கு மாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சார்ள்ஸ் முகக்கவசம் அணியாதிருப்பதினை ஊடகங்கள் புகைப்படம் , காணொளி எடுத்தமையினையடுத்து அவர் உடனடியாக அவரின் பிரத்தியோக பாதுகாப்பு உத்தியோகத்தரை வர வழைத்து முகக்கவசம் எடுத்து வருவமாறு பணித்து அதன் பின்னர் முகக்கவசத்தினை அணித்திருந்தார்.