பக்கங்கள்

பக்கங்கள்

3 நவ., 2020

யாழ். நகரில் உணவகங்களில் அமர்ந்து உண்ண தடை

யாழ்ப்பாண மாநகரத்திற்குற்பட்ட உணவகங்களில் அமர்ந்து உணவருந்துவதற்பு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாநகர முதல்வர்

ஆனோல்ட் அறிவித்துள்ளார்

நாட்டில் அதிகரித்துவரும் கொவிட் 19 தாக்கத்திலிருந்து நாம் பாதுகாப்புடன் உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது மிகுந்த அவசியமாகும். அந்த வகையில் சமூக இடைவெளி, முகக் கவசம் அணிதல் மற்றும் கைகளை அடிக்கடி தொற்றுநீக்கிகளைக் கொண்டு சுத்தம் செய்தல் போன்றவை அவசியமாக நாம் பின்பற்ற வேண்டிய சுகாதார நடைமுறைகளாகும்.

இதற்கு மேலதிகமாக யாழ் மாவட்ட கொவிட் 19 தடுப்பு உயர் மட்ட செயலணியின் தீர்மானங்களுக்கு அமைவாக யாழ் மாநகர எல்லைக்குற்பட்ட உணவகங்கள், குளிர்பானசாலைகள் மற்றும் உணவு விற்பனை செய்யும் திறந்த வெளி உணவகங்களில் அமர்ந்து உணவருந்துதல் உடன் அமுலுக்கு வரும் வகையில் இன்று முதல் (02) (மறு அறிவித்தல் வரை) தடைசெய்யப்படுகின்றது. என்றும் அவர் கூறியுள்ளார்.