பக்கங்கள்

பக்கங்கள்

15 நவ., 2020

கனகபுரம் துயிலுமில்லத்தில் துப்புரவு செய்த சிறீதரன் எம்.பியிடம் விசாரணை

கிளிநொச்சி - கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் துப்பரவு பணியில் ஈடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிடம் பொலிஸார் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்

. எதிர்வரும் 27ஆம் திகதி மாவீரர் நாள் என்பதால் துயிலும் இல்லத்தில் துப்பரவுப் பணியினை மேற்கொள்ளப்பட்டன.

இன்று காலை, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் துப்பரவு பணிகள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையில் வேழமாலிகிதன் உள்ளிட்ட பலரால் இந்த பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, அவ்விடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், சகாதார நடைமுறையினை பின்பற்றாது செயற்படுவதாகவும் துப்பரவு பணிக்கு அனுமதி வழங்கியது யார் எனவும் வினவியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஏனையோரிடமும் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.