பக்கங்கள்

பக்கங்கள்

28 நவ., 2020

யாழ்ப்பாணத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்த தயாரான கிறிஸ்தவ மதகுரு பொலிஸாரால் கைது

www.pungudutivuswiss.com
தமிழீழ மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்த ஏற்பாடு செய்துகொண்டிருந்த கிறிஸ்தவ மதகுரு ஒருவர் சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாவீரர் துயிலும் இல்லங்களிலும் பொது இடங்களிலும் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு சிங்கள நீதிமன்று தடை விதித்திருந்த நிலையில், மாவீரர்களின் பெற்றோரும் உறவினர்களும் பொதுமக்களும் தமது வீடுகளில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர். 

இதன்போது, யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்திற்கு முன்னால் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றுவதற்காக ஏற்பாடுகளை செய்துகொண்டிருந்த கிறிஸ்தவ மதகுரு ஒருவர் அங்கு சென்ற சிறிலங்கா படையினராலும் பொலிஸாராலும் கைது செய்யப்பட்டுள்ளார். 

குருமட அதிபரான இளவாலையைச் சேர்ந்த பாஸ்கரன் என்ற கிறிஸ்தவ மத குருவே கைது செய்யப்பட்டுள்ளார்.