பக்கங்கள்

பக்கங்கள்

30 நவ., 2020

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார்

www.pungudutivuswiss.com

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவல் நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேசியுள்ளார். கொழும்புக்கு

இரண்டு நாள் பயணத்தை மேற்கொண்ட அஜித் டோவல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து கலந்துரையாடியிருந்தார்

இதனையடுத்து புதுடில்லி திரும்புவதற்கு முன்னர் கொழும்பிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகரின் வாசஸ்தலமான இந்தியா ஹவுஸில் நேற்று சம்பந்தனை அவர் சந்தித்து கலந்துரையாடினார்.

சுமார் 30 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பில் இலங்கையின் அரசியல் விவகாரங்கள் குறித்தும், வடக்கு கிழக்கு நிலைமைகள் தொடர்பாகவும் பேசியதாகவும் சம்பந்தன் தெரிவித்தார்.