பக்கங்கள்

பக்கங்கள்

21 நவ., 2020

தனியார் ஊடகத்தில் பணிபுரியும் பெண் ஒருவர் திடீரென உயிரிழப்பு!!

www.pungudutivuswiss.com

குறித்த பெண் நேற்றைய தினம் அலுவலகத்திற்கு பணிக்கு சென்றுவிட்டு மாலை வீடு திரும்பி, வீட்டில் சாப்பாடு

முடித்த பின்னர் உடலில் வலி ஏற்பட்டதாகவும் இதையடுத்து கணவர் வைத்தியசாலைக்கு அழைத்து சென்ற வேளை அவர் உயிரிழந்துள்ளமை தெரியவந்தது.

உயிரிழந்த பெண்ணுக்கு ஏற்கனவே வலிப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.கண்டி புசல்லாவையை சொந்த இடமாகக் கொண்ட குழந்தைவேல் சந்திரமதி என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.இவர் கொழும்பு தனியார் ஊடகத்தில் செய்திப்பிரிவின் செய்தித் தயாரிப்பாளராக பணியாற்றி வருகிறார்.

உயிரிழந்த பெண்ணுக்கு கொரோனா தொற்று இருந்திருக்கலாமா என்ற சந்தேகத்தில் பி.சிஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாகவும் பரிசோதனை முடிவுகள் வந்தவுடன் இறுதிக் கிரியைகள் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.