பக்கங்கள்

பக்கங்கள்

11 டிச., 2020

பிரான்ஸில் செவ்வாய் (15/12 ) பகலில் முற்றாக தளர்த்தப்படும் ஆனால் இரவு 8 மணிமுதல் காலை 6 மணிவரை உள்ளிருப்பு

www.pungudutivuswiss.com
பிரான்ஸில் அனைவரும் எதிர்பார்த்த டிசம்பர் 15 ற்கான முடிவுகள் தற்பொழுது பிரதம மந்திரி அவர்களால் அறிவிக்கப்படுள்ளது. 5000 ற்கும் குறைவான கொரோனா தொற்றாளர்களாக குறைவடையாத காரணத்தால் எதிர்வரும் செவ்வாய் முதல் (15/12 ) பகலில் முற்றாக தளர்த்தப்படும் உள்ளிருப்பு. ஆனால் இரவு 8 மணிமுதல் காலை 6 மணிவரை உள்ளிருப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நத்தாரை முன்னிட்டு 24 ம் திகதி இரவு மட்டும் விதிவிலக்காக உள்ளிருப்பு தளர்தப்படுகிறது. 31 ம் திகதி இரவு புதுவருட கொண்டாட்டங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதுடன் இரவு 8 மணிக்கு பின்னர் வெளி செல்வதும் தண்டனைக்குரியது என்பதும் கவனத்திற்குரியது. மற்றும் எதிர்வரும் 7 ம் திகதிவரை கலாச்சார நிகழ்வுகள் நடைபெறுவதற்கும் சாத்தியங்கள் இல்லை. ( மண்டபங்கள், திரையரங்குகள் என்பன தொடர்ந்தும் மூடப்படுகிறது) . இரவில் வெளி செல்வதற்கான புதிய அத்தாட்சிபத்திரம் வெளியிடப்பட்டுள்ளது.