பக்கங்கள்

பக்கங்கள்

12 டிச., 2020

யாழ். மருதனார்மடத்தில் 31 பேருக்கு கொவிட்-19 தொற்று

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம் மருதனார்மடச் சந்தையில் இன்று மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் 31 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

மருதனார்மட சந்தை வியாபாரிகள் 24 பேருக்கும், உறவினர்கள் ஏழு பேருக்குமே கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

நேற்று மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று பி.சி.ஆர் பரிசோதனையில் மருதனார்மடச் சந்தை வியாபாரியொருவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்தே சந்தையில் இன்று 394 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. 

குறித்த நபர் ஓட்டோ ஒட்டுநரொருவருமாவார் என்ற நிலையில் மருதனார்மடச் சந்தியிலுள்ள ஓட்டோ ஓட்டுநர்களிடன் எழுமாற்று பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டபோதே அவருக்கு கொவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.