பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2020

அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தம்; 8 பேருக்கு கொரோனா; ரஜினியின் நிலை?

www.pungudutivuswiss.com
அண்ணாத்த படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா தொற்று எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஐதராபாத்தில் டிசம்பர் 14ம் தேதி முதல் படப்பிடிப்பு நடந்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளனர்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் அண்ணாத்த படத்தின் மீதமுள்ள 40 சதவீத படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

மேலும் ரஜினிகாந்திற்கு கொரோனா தொற்று அறிகுறியில்லையென பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.