பக்கங்கள்

பக்கங்கள்

10 டிச., 2020

யாழ், A9 வீதியில் கோர விபத்து,எரிபொருள் தாங்கி உடன் மோதி பெண்ணை தொடர்ந்து 4 வயது சிறுவனும் பலி!

www.pungudutivuswiss.com
யாழ்.தென்மராட்சி நுணாவில் A9 வீதியில் கார் ஒன்றின் ரயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் நான்கு வயதுச் சிறுவன் உட்பட இருவர் உயிரிழந்துள்ளதோடு,மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 11.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்திலிருந்து சாவகச்சேரி நோக்கியப் பயணித்த கார் ஒன்றின் ரயர் வெடித்து, திருத்த வேலைக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எரிபொருள் தாங்கி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் ஆன் டேரோளினி (30), யோகதாஸ் மகிழன் (6) ஆகியோர் உயிரிழந்தனர்.

ஆன் மக்கிலியோட் (6) என்ற சிறுவன் தலைக் காயம் காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேபோனியா, கரோலின் (35) என்ற பெண்கள்
காயம் காரணமாக அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.