பக்கங்கள்

பக்கங்கள்

3 டிச., 2020

விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டம்.

www.pungudutivuswiss.com
வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதற்கு ஏதுவாக கொவிட் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய விமான நிலையங்களை மீண்டும் திறப்பதற்கு திட்டமிடப்பட்டிருப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

சுகாதார அதிகாரிகளின் அனுமதி கிடைத்தவுடன் விமான நிலையங்களை திறக்க முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் சுகாதார அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடத்தப்படவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.