பக்கங்கள்

பக்கங்கள்

8 டிச., 2020

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த எண்ட்ரி

www.pungudutivuswiss.com

தமிழில் வெற்றிகரமாக நான்காவது சீசனில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல

தொகுப்பாளினி கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் கமல் தொகுத்து வழங்கும் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 4-ஆம் தேதி தொடங்கி ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது 60 நாட்களை இந்த நிகழ்ச்சி கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுவராசியம் கருதி வைல்ட் கார்டு எண்ட்ரியாக சில போட்டியாளர்களை அனுப்புவது வழக்கமாகும்.

அதன்படி இந்த சீசனில் ஏற்கனவே சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனா, பாடகி சுசித்ரா ஆகியோர் பிக்பாஸ் இல்லத்திற்கு சென்றனர். இவர்களில் சுசித்ரா குறைந்த வாக்குகள் பெற்று போட்டியில் இருந்து வெளியேறி விட்டார். அதையடுத்து மேலும் சில போட்டியாளர்களும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக செல்ல உள்ளதாக தொலைக்காட்சி வட்டாரத்தில் கூறப்பட்டது.

Advertisement

அதன்படி முதலில் சின்னத்திரை நடிகர் அசீம் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக கூறப்பட்டது. இதற்காக தனிமைப்படுத்துதலில் இருந்த அவர் சொந்த காரணங்களுக்காக திடீரென விலகினார்.

இந்நிலையில் அடுத்த வைல்ட் கார்டு எண்ட்ரியாக பிரபல தொகுப்பாளினி கலந்து கொள்ள உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

பிரபல தொலைகாட்சித் தொகுப்பாளினி மகேஸ்வரி. இவர் சமீபத்தில் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஓட்டலில் இருந்தபடி புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அத்துடன் சீக்கிரமே ஒரு ஆச்சரியமான அறிவிப்பை எதிர்பாருங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தார். அவர் புகைப்படம் வெளியிட்டுள்ள ஓட்டல் பிக்பாஸ் போட்டியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அதே ஓட்டல் என்பதாலும், அவர் தனிமைப்படுத்துதலில் உள்ளதாலும், அவர்தான் விரைவில் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியாக உள்ளே செல்வார் எனப் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.