பக்கங்கள்

பக்கங்கள்

23 டிச., 2020

கொரோனா பரிசோதனை முடிவுகளுடன் - பிரித்தானியாவில் இருந்து பிரான்சுக்கு திரும்பலாம்..

www.pungudutivuswiss.com
பிரித்தானியாவில் வசிக்கும் பிரெஞ்சு மக்கள் கொரோனா பரிசோதனை முடிவுகளுடன் பிரான்சுக்கு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவில் இருந்து பிரான்சுக்குள் நுழையும் அனைத்து வழிகளும் மூடப்பட்டுள்ள நிலையில், பிரெஞ்சு நாட்டு மக்களுக்கு மாத்திரம் நாடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. PCR என அழைக்கப்படும் கொரோனா பரிசோதனையில் உங்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டால், நீங்கள் தாராளமாய் நாடு திரும்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, பிரித்தானிய மக்களுக்கு பிரான்சுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டுள்ளமை தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.