கொழும்பில் இருந்து திரும்பிய பெண்ணுக்கும் குழந்தைக்கும் வவுனியாவில் தொற்று!
www.pungudutivuswiss.com
வவுனியா – சாளம்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் ஒருவருக்கும் அவருடைய 5 வயது மகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறிப்பட்டுள்ளது. அவர்கள் இருவரும் கொழும்பிலிருந்து கடந்த வாரம் வருகை தந்த நிலையில் சுயதனிமைப்படுத்தப்பட்டனர்.சுயதனிமைப்படுத்தப்பட்டு 10 நாள்கள் நிறைவடைந்த நிலையில் அவர்களிடம் நேற்று மாதிரிகள் பெறப்பட்டு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்றுள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டது.