பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜன., 2021

4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி: இந்தியாவுக்கு 328 ரன்கள் இலக்கு

www.pungudutivuswiss.com
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற இந்திய அணிக்கு 328 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிரீஸ்பேனில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 294 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளை இழந்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக ஸ்மித் 55, வார்னர் 48, க்ரீன் 37 ரன்கள் குவித்தனர். இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்து வீசிய முகமது சிராஜ் 5, ஹர்துல் தாக்கூர் 4 விக்கெட் வீழ்த்தினர்.
4 போட்டி கொண்ட தொடர் 1-1 என உள்ள நிலையில் பிரிஸ்பேன் போட்டியில் வெல்ல இரு அணிகளும் முனைப்பு காட்டி வருகிறது.