பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜன., 2021

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம்- இலங்கை மருத்துவ சங்கம்

www.pungudutivuswiss.com
கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கு ஆதரவாக இலங்கை மருத்துவ சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.


இலங்கை மருத்துவ சங்கம் தான் மேற்கொண்ட அவதானிப்புகளின் அடிப்படையிலும் தற்போதுள்ள விஞ்ஞான ரீதியான தரவுகளை அடிப்படையாக வைத்தும் இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் சமீபகாலங்களில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாளும் விவகாரத்தினால் இனங்களிற்கு இடையிலான ஐக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையின் கலாச்சார பன்முகதன்மையை கருத்தில் கொள்ளும்போது கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையான கொள்கையொன்று அவசியம் என இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.