பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜன., 2021

சுவிஸில் பிரபல விடுதியில் கொரோனா பரவல்: வெளியான அதிர்ச்சி தகவல்

www.pungudutivuswiss.com
சுவிட்சர்லாந்தின் பிரபலமான இரு ஹொட்டல்களில் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. St. Moritz நகரில் அமைந்துள்ள இரண்டு ஹொட்டல்களில் உள்ள ஊழியர்களுக்கே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
சுவிட்சர்லாந்தின் பிரபலமான இரு ஹொட்டல்களில் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள தகவல் வெளியாகியுள்ளது. கிரிசன்ஸ் மண்டலத்தில் St. Moritz நகரில் அமைந்துள்ள இரண்டு ஹொட்டல்களில் உள்ள ஊழியர்களுக்கே கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

மொத்தம் 53 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் 31 பேருக்கு உருமாறிய வீரியம் மிக்க கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

ஆனால் குறித்த ஹொட்டல்களில் தங்கியிருந்த விருந்தினர்களுக்கு இதனால் பாதிப்பு இல்லை என, சோதனையில் தெரிய வந்துள்ளது.

இருப்பினும், அந்த இரு ஹொட்டல்களில் தங்கியிருந்த மொத்த விருந்தினர்களுக்கும் கொரோனா சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஹொட்டல் ஊழியர்களிடம் இருந்து விருந்தினர்களுக்கு பாதிப்பு ஏற்படாத நிலையில்,

பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தும் வெற்றி பெற்றுள்ளதையே இது காட்டுவதாக மாகாண நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பாதிப்புக்கு உள்ளான இரு ஹொட்டல்களில் தங்கியுள்ள அனைவரும் எதிர்வரும் 27 ம் திகதி வரை சுய தனிமைப்படுத்தலில் இருக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மட்டுமின்றி இரு ஹொட்டல்களில் பணியாற்றும் 435 ஊழியர்களும் 113 விருந்தினர்களும் கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு St. Moritz நகரில் தற்போது பாடசாலைகள் உட்பட முக்கியமான அனைத்தும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற கோரிக்கையை நகர நிர்வாகம் முன்வைத்துள்ளது