பக்கங்கள்

பக்கங்கள்

10 ஜன., 2021

ஹரீன்பெர்ணான்டோவிற்கு ஏதாவது தீங்குநேர்ந்தால் ஜனாதிபதியும் அரசாங்கமுமே அதற்கு பொறுப்பேற்கவேண்டும்- சஜித்

www.pungudutivuswiss.com
ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச அம்பாறையில் ஆற்றிய உரைக்கு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன்பெர்ணான்டோ நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு பதிலளிக்கும் விதத்தில் கோத்தபாய ராஜபக்ச ஆற்றிய உரை குறித்தே எதிர்கட்சி தலைவர் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் உரை பாரதூரமானது ஜனநாயக நாட்டில் நிகழக்கூடாதது என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.


எனது தந்தை உட்பட ஆயிரக்கணக்கானவர்களை கொலை செய்த பிரபாகரனின் இறப்பு குறித்து எங்களிற்கு பிரச்சினையில் அவர் ஒரு பயங்கரவாதி கொலைகாரர் என சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஆனால் ஹரீன்பெர்ணான்டோ இந்த நாட்டின் இளம் தலைவர் அவர் ஜனநாயக வரையறைக்குள் தனது கருத்தினை சுதந்திரமாக வெளியிட்டுள்ளார் என சஜித்பிரேமதாச தெரிவித்துள்ளார்.
ஹரீன் பெர்ணான்டோவிற்கு விடுக்கப்பட்டுள்ள அச்சுறுத்தல் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல் எனவும் எதிர்கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.
ஹரீன்பெர்ணான்டோவிற்கு ஏதாவது தீங்குநேர்ந்தால் ஜனாதிபதியும் அரசாங்கமுமே அதற்கு பொறுப்பேற்கவேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்