பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜன., 2021

தனிமைப்படுத்தல் நிலையங்களிற்கு கட்டணம் செலுத்தவேண்டியதில்லை

www.pungudutivuswiss.com
வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்களிற்கு அரசாங்க தனிமைப்படுத்தல் நிலையங்கள் வழங்கப்படும் என அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

டுவிட்டரில் இதனை தெரிவித்துள்ள அவர் இலங்கையில் வெளிநாடுகளில் இருந்து அழைத்துவரப்படுபவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிற்காக கட்டணம் செலுத்தவேண்டியதில்லை என தெரிவித்துள்ளார்.

இலங்கையர்களை அழைத்துவருவதற்கான விமானசேவைகள் அடுத்தவாரம் முதல் அதிகரிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படும் இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களிற்காக பெருந்தொகை பணத்தை செலுத்துமாறு நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.