பக்கங்கள்

பக்கங்கள்

25 ஜன., 2021

ரிஸ் உதைபந்தாட்ட (PSG) வீரர் வீட்டில் கொள்ளை

www.pungudutivuswiss.com
பரிஸ் உதைபந்தாட்ட அணியின் (PSG) வீரர் ஒருவர் வீட்டில் €25.000 யூரோக்கள் பெறுமதியுள்ள பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. 
 
PSG அணியின் பதில் கோல் கீப்பராக (substitute goalkeeper  ) விளையாடி வரும் Sergio Rico எனும் வீரர் வீட்டிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. Neuilly-sur-Seine (Hauts-de-Seine)  நகரில் உள்ள அவரது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள், அங்கிருந்த ஆடம்பர கடிகாரம், ரொக்கப்பணம் உள்ளிட்ட பொருட்களை சூறையாடிவிட்டு சென்றிருந்தனர். 
 
நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை குறித்த வீரர் Montpellier நகருக்கு எதிராக இடம்பெற்ற போட்டி ஒன்றில் விளையாடிவிட்டு வீடு திரும்பியிருந்தபோது, இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதை அறிந்து கொண்டு, காவல்துறையினரை அழைத்துள்ளார். 
 
கொள்ளையிடப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு €25.000 யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.