பக்கங்கள்

பக்கங்கள்

1 பிப்., 2021

ஆயிரம் பக்கங்களைக் கொண்ட அறிக்கை ஜனாதிபதியிடம்!

www.pungudutivuswiss.com
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு, தனது அறிக்கையை நாளை முற்பகல் 11.00 மணிக்கு ஜனாதிபதியிடம் ஒப்படைக்கவுள்ளதாக ஆணைக்குழு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் 1000 பக்கங்கள் மற்றும் சாட்சிகளிடமிருந்து பதிவு செய்யப்பட்ட அறிக்கைகள் உள்ளிட்ட ஆவணங்கள் உள்ளதாக என்று ஆணைக்குழுவின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 செப்டம்பர் 21 அன்று வெளியிட்ட சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை அடுத்து உயி;;ர்த்த ஞாயிறுத்தாக்குதல் தொடர்பாக ஐந்து பேர் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு; நியமிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவிற்கு உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா தலைமையில் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான நிசங்க பந்துல கருணாரத்ன, முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் பந்துல அத்தபத்து, மேல்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சுனில் ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நீதி அமைச்சின் முன்னாள் செயலாளர் மங்களிகா அதிகாரி ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

ஆரம்பத்தில் இருந்து 214 நாட்கள் கூடிய ஆணைக்குழு 640 சந்தர்ப்பங்களில் 457 சாட்சிகளின் விசாரணைகளை நடத்தியது. மேலதிகமாக சட்டமாஅதிபர் திணைக்களம் விசாரணைக்கு உதவியளித்தது குறிப்பிடத்தக்கது.