பக்கங்கள்

பக்கங்கள்

16 பிப்., 2021

கட்சி தாவும் படலத்தை ஆரம்பிக்க வேண்டாம்! இது என்ன விளையாட்டு - முஸ்லிம் காங்கிரஸ் மீது சீறிப்பாய்ந்த மரிக்கார்

www.pungudutivuswiss.com
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இப்போது மன்னிப்பு கேட்பது பிழையானது. முஸ்லிம் சமூகத்திலிருந்து வாக்குகளைப் பெற்று வென்று கட்சி தாவும் படலத்தை ஆரம்பிக்க வேண்டாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம்.மரிக்கார் தெரிவித்துள்ளார்.

கொரோனாவையும் 20ஆவது திருத்ததையும் குழப்பிக் கொள்ள வேண்டாம் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கொழும்பு - எதுல் கோட்டேயில் அமைந்துள்ள எதிர்க்கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

மூன்றில் இரண்டு பெரும்பான்மை உருவாகி ஏகாதிபத்தியம் நாட்டில் முன்நோக்கி வருகிறது. அதற்கு அனுமதித்து விட்டு இப்போது மன்னிப்பு என்பது மீண்டும் மக்களை ஏமாற்றும் செயல். கொரோனா மரணம் என்பது வேறு 20 ஆவது திருத்தம் என்பது வேறு. 20 ஆவது திருத்தம் கொள்கை ரீதியானது.

அடுத்த விடயம் கட்சியின் தலைவர்கள் இரண்டு போரும் ஐக்கிய மக்கள் சக்தியோடு இருந்து கொண்டு ஏனையவர்களை வாக்களிக்க அனுமதித்துள்ளார்கள்.

இது என்ன விளையாட்டு. கொரோனா விடயம் இவ்வளவு தூரம் செல்வதற்கு பிரதான காரணம் கொரோனா ஆரம்ப நாட்களில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் வெளியிட்ட முகநூல் பதிவுதான்.

நாங்கள் புதைப்பதற்குரிய உரிமையை முஸ்லிம்களுக்காக மாத்திரம் கேட்கவில்லை. சிங்களவர்களுக்காகவும், கிறிஸ்தவர்களுக்காகவும், பொதுவாக கேட்கிறோம். அரசியல் என்பது வேறு மதம் என்பது வேறு.

இந்த மன்னிப்பை நாட்டு மக்களும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒரு போதும் மன்னிக்காது. காரணம் பல கட்ட கலந்துரையாடல்களில் பங்கேற்று எங்களுக்கு உறுதியளித்து இறுதி நேரத்தில் தான் இவர்கள் கட்சி தாவினர்கள்.

அரசாங்கம் நியமித்த ஜெனீபர் தலைமையிலான குழு அறிக்கையையின் பிரகாரம் புதைப்பதற்குரிய அனுமதியை வழங்குங்கள். வர்த்தமானி வெளியிட்டு சட்ட அங்கிகாரம் வழங்குங்கள். மனிதர்களின் அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாருங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags : #Saidulla Marikkar