பக்கங்கள்

பக்கங்கள்

20 பிப்., 2021

சஹ்ரானிடம் பயிற்சி பெற்ற இளம்பெண் கைது

www.pungudutivuswiss.com
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹஸீமின் பயிற்சி பாடசாலையில் பயிற்சி பெற்ற பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். மாவனெல்லை ஹிங்குல பிரதேச்தை சேர்ந்த 24 வயது பெண் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

சஹ்ரானினால் பெண்கள் சிலரை பயங்கரவாத செயற்பாட்டுக்கு இணைத்துக் கொள்வதற்காக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததாகவும் அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி பயங்கரவாத விசாரணை பிரிவினால் 6 பெண்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்