பக்கங்கள்

பக்கங்கள்

18 பிப்., 2021

காரைநகரில் கடற்படைக்கு காணி சுவீகரிக்க எதிர்ப்புT

www.pungudutivuswiss.com
காரைநகரில் கடற்படைக்கு காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்படவிருந்த அளவீட்டு பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பிரதேச மக்களும், அரசியல் கட்சிகளும் இணைந்து இந்த அளவீட்டு பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

காரைநகரில் கடற்படைக்கு காணி சுவீகரிக்க மேற்கொள்ளப்படவிருந்த அளவீட்டு பணி தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பிரதேச மக்களும், அரசியல் கட்சிகளும் இணைந்து இந்த அளவீட்டு பணியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

காரைநகர் இந்து கல்லூரிக்கு சொந்தமான மற்றும் தனியார் காணிகள் 8 பரப்பை, கடற்படையின் எலார கடற்படை தளத்திற்காக சுவீகரிக்க கடற்படையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இன்று அந்த காணிகள் அளவீட்டு பணி மேற்கொள்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் சி.சிறிதரன், செ.கஜேந்திரன், வடக்கு அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள் பா.கஜதீபன், விந்தன் கனகரட்ணம் மற்றும் பொதுமக்கள் அங்கு கூடி எதிர்ப்பை வெளிப்படுத்தியதையடுத்து நிலஅளவை திணைக்களத்தினர் திரும்பி சென்றனர்.