பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2021

அமைச்சர் சம்பத் ஆதரவாளர் வீடுகளில் ரெய்டு

www.pungudutivuswiss.com
கடலூர்: கடலூர் மாவட்டத்தில், அமைச்சர் சம்பத் ஆதரவாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.


கடலூர் சட்டசபை தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் மீண்டும் அமைச்சர் சம்பத் போட்டியிடுகிறார்.

இந்நிலையில், அமைச்சரின் ஆதரவாளர்கள் என கூறப்படும் 6 பேரின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சென்னையில் இருந்து சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கடலூர் மாவட்டம் சூரப்பன்நாயக்கன்சாவடியில் உள்ள அதிமுக பிரமுகர் மதியழகன் வீட்டுக்கு வந்த வருமான வரித்துறையினர், அங்கு தீவிர சோதனை நடத்தினர். வீட்டில் இருந்து வெளியே செல்லவும், வெளியில் இருந்து வீட்டிற்கு உள்ளே வரவும் அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.


latest tamil news


அதுபோல, அமைச்சர் சம்பத்தின் மற்றொரு ஆதரவாளர் பாலகிருஷ்ணன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கடலூரில் அதிமுக நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், மகேஷ்வரிக்கு சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்