பக்கங்கள்

பக்கங்கள்

19 மார்., 2021

வவுனியா - பம்பைமடுவில் சிசுவை உயிருடன் புதைத்த தாய் கைத

www.pungudutivuswiss.com
வவுனியா - பம்பைமடுவில் பெற்ற சிசுவை புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் 36 வயதான தாயொருவர், கடந்த திங்கட்கிழமை சிசு ஒன்றை பெற்றுள்ளார். எனினும் பிறந்த சிசுவை தான் வசிக்கும் காணியில் கிடங்கு வெட்டி புதைத்துள்ளார்.


வவுனியா - பம்பைமடுவில் பெற்ற சிசுவை புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் 36 வயதான தாயொருவர், கடந்த திங்கட்கிழமை சிசு ஒன்றை பெற்றுள்ளார். எனினும் பிறந்த சிசுவை தான் வசிக்கும் காணியில் கிடங்கு வெட்டி புதைத்துள்ளார்.

கடந்த காலத்தில் தாயின் உடல் மாற்றத்தினை அவதானித்த சிலர் கேள்வி எழுப்பியபோது, தனது வயிற்றில் கட்டி இருப்பதாக தெரிவித்து வந்த குறித்த தாய் தொடர்பில் சந்தேகம் கொண்ட ஒருவர் கிராம சேவகருக்கு வழங்கிய தகவலில் அடிப்படையில் பொலிஸாரின் ஊடாக குறித்த சம்பவம் தொடர்பில் விசாரிக்கப்பட்டது. இதன்போது குறித்த தாய் தான் பெற்ற சிசுவை புதைத்தமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் தாய் தான் சிசுவை பிரசவிக்கவில்லை என தெரிவித்த நிலையில் அவரை, வவுனியா வைத்தியசாலையில் அனுமதித்து பரிசோதித்த போது அவரே சிசுவை பிரசவித்துள்ளமை தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், தாயாரை பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.

குறித்த தாய் கடந்த சில வருடங்களாக கணவனை பிரிந்து வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது