பக்கங்கள்

பக்கங்கள்

20 மார்., 2021

சஜித் - விமல் சந்திப்பு! பின்னணியில் பஸில் ராஜபக்ச?

www.pungudutivuswiss.com
அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும், எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் இடையே தனது இல்லத்தில் நடந்ததாக வெளியாகும் சந்திப்பு குறித்த செய்தியை நாடாளுமன்ற உறுப்பினரான டிரான் அலஸ் நிராகரித்துள்ளார்.

இன்று ஊடகங்களில் இது குறித்து வெளியான செய்தி தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இச்செய்தியில் எந்த உண்மையும் கிடையாது. யாரோ ஒருவருடைய சதி முயற்சியாகவே இந்த செய்தியைப் பார்க்கின்றேன்.

மஹரகம பிரதேசத்தில் அண்மையில் நடந்த மரணச் சடங்கிற்கு சென்றபோது சஜித்தை சந்தித்ததாக குறிப்பிடும் விமல் வீரவன்ச, அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து இன்று அச்செய்தி வெளியாகியுள்ளது என்றார்.

இருப்பினும் இந்த பொய்யான செய்திகளுக்குப் பின்னால் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான பஸில் ராஜபக்ஷவே செயற்பட்டிருப்பதாக விமல் அணியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.