பக்கங்கள்

பக்கங்கள்

18 மார்., 2021

இந்தியா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடுநிலை வகிக்கும் -அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே

www.pungudutivuswiss.com
இப்படித்தான் செயல்படுவோம்!! ஸ்ரீலங்கா தொடர்பில் இந்தியா வெளியிட்டுள்ள அறிவித்தல்

ஸ்ரீலங்காவின் பிராந்திய இறையாண்மையைப் பாதுகாக்கும் வகையில் ஜெனிவாவில் இந்தியா செயல்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்காவின் வெளியுறவு செயலாளர் அட்மிரல்; ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்றைய தினம் இந்த தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

மிக நெருங்கிய அண்டை நாடாக ஸ்ரீலங்காவின் பிராந்திய இறையாண்மையை பாதுகாப்பதாக இந்தியா உறுதிபூண்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

வல்லரசு என்ற அடிப்படையில் இந்தியாவின் நிலைப்பாட்டை இலங்கை பெரிதும் பாராட்டுகிறது என்றும் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்காவில் அதன் பிராந்தியத்தில் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளது.

இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் தீர்மானத்தின்படி அந்த நாடுகளின் ஆதரவு தேவை என்று வெளியுறவு செயலாளர் கூறியுள்ளார்.

ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தல் உட்பட பல்வேறு காரணங்களால் இந்தியா ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் நடுநிலை வகிக்கும் என்று நம்புவதாக அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.