பக்கங்கள்

பக்கங்கள்

9 ஏப்., 2021

5 வயது மகளின் வேண்டுகோளை அடுத்து நக்சல்களிடம் சிக்கிய சிஆர்பிஎப். வீரர் விடுதலை: குடும்பத்தினர் மகிழ்ச்சி:

www.pungudutivuswiss.com
நக்சல்கள் பிடியில் சிக்கியிருந்த சிஆர்பிஎப் வீரர் ராகேஷ்வர் சிங் மான்ஹாஸ் இன்று விடுவிக்கப்பட்டார்.
சத்தீஸ்கரில், பீஜப்பூர், சுக்மா மாவட்டங்கள் எல்லையில் உள்ள வனப் பகுதியில் கடந்த 3-ம் தேதியன்று சி.ஆர்.பி.எப்., எனப்படும், மத்திய ரிசர்வ் போஸீஸ் படையின் கோபுரா பிரிவினர் அடங்கிய கூட்டுப் படை வீரர்கள், நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.அப்போது, நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில், 22 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். 31 வீரர்கள் காயமடைந்தனர்.
latest tamil news
இந்த தாக்குதலின் போது ராகேஷ்வர் சிங் மான்ஹாஸ் என்ற வீரர் காணாமல் போனார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அவர் தங்கள் பிடியில் இருப்பதாகவும் அவரை விடுவிக்க வேண்டுமெனில் மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என நக்சல்கள் அறிவித்தனர்.
இந்நிலையில் ராகேஷ்வர் சிங் மான்ஹாலை நக்சல்கள் விடுத்தனர். மீட்கப்பட்ட ராகேஷ்வர் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். விடுதலை செய்யப்பட்டதையடுத்து ராகேஷ்வர் சிங் குடும்பத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்