பக்கங்கள்

பக்கங்கள்

6 ஏப்., 2021

ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் ஆயரின் உடல் நல்லடக்கம்!

மறைந்த மன்னார் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகையின் திருவுடல் இன்று மாலை ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீருக்கு மத்தியில் நல்லடக்கம் செய்யப்பட்டது

மறைந்த ஆயருக்கு மரியாதை செலுத்தும் விதமாக மன்னார் மாவட்டத்தில் பூரண கடையடைப்புடன் துக்கதினம் அனுஷ்டிக்கப்பட்டது.

இதற்காக வீதிகள், வீடுகள் எங்கும் கருப்பு மற்றும் வெள்ளை நிறக் கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. மன்னார் மாவட்டம் சோக மயமாகக் காணப்பட்டது.

மன்னார் மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டிருந்ததுடன்,தனியார் போக்கு வரத்து சேவைகளும் இடம் பெறவில்லை.

இதேவேளை, வடக்கு கிழக்கு மற்றும் நாட்டின் ஏனைய பாகங்களில் இருந்தும் பொதுமக்கள், அரச அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், மதத் தலைவர்கள் என பல்லாயிரக் கணக்கான மக்கள் ஆயரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ஆயரின் பூதவுடல் மன்னார் புனித செபஸ்தியார் ஆலயத்தில் இன்று மாலை மூன்று மணியளவில் இலங்கையின் மறைமாவட்ட ஆயர்களின் இரங்கல் திருப்பலியுடன் பேராலயத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.