பக்கங்கள்

பக்கங்கள்

15 ஏப்., 2021

ஸ்காபரோவில் இரண்டு தடுப்பூசி மையங்களில் ஆயிரக்கணக்கானோரின் பதிவுகள் ரத்து

www.pungudutivuswiss.com
ஸ்காபரோவில் இரண்டு நிலையங்களில் நேற்று தொடக்கம் திங்கட்கிழமை வரையான காலப்பகுதியில், தடுப்பூசி போடுவதற்காக வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கானோரின் பதிவுகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன. தடுப்பு மருந்து பற்றாக்குறையினாலேயே, இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக, ஸ்காபரோ சுகாதார வலையமைப்பு தெரிவித்துள்ளது.

சென்ரினியல் கல்லூரி மற்றும் சென்ரெனரி மருத்துவமனை ஆகியவற்றிலேயே இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், தடுப்பு மருந்து விநியோகம் இடம்பெற்ற பின்னர், இந்த இரு மருந்தகங்களும் மீண்டும் திறக்கப்படும் என்றும் ஸ்காபரோ சுகாதார வலையமைப்பு தெரிவித்துள்ளது.

மேலதிக மருந்துகள் வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த பின்னர், கடைசி நிமிடத்திலேயே இந்தப் பதிவுகளை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.