பக்கங்கள்

பக்கங்கள்

24 மே, 2021

சஜித்துக்கும் மனைவிக்கும் கொரோனா

www.pungudutivuswiss.com
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் அவருடைய மனைவியான ஜலனி பிரேமதாஸ ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ மற்றும் அவருடைய மனைவியான ஜலனி பிரேமதாஸ ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தனது டுவிட்டரில் பதிவொன்றை இட்டுள்ள சஜித் பிரேமதாஸ, “எனக்கும் மனைவிக்கும் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. கொவிட்-19 தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டதால்,பி.சி.ஆர் பரிசோதனைகளை செய்துகொண்டோம். அதன் அறிக்கைகள் கிடைத்துள்ளன. அதன்பிரகாரம் இருவரும் கொரோனா தொற்றியுள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. இருவரும் வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவின் நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள சிசிரிவி கெமராக்கள் கண்காணிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனூடாக அவருடன் நெருங்கி பழகியவர்களை இனங்கண்டு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.