பக்கங்கள்

பக்கங்கள்

29 மே, 2021

தனிமைப்படுத்தப்பட்டது நல்லூர் அரசடி

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம்- நல்லூர் அரசடிப் பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நேற்று மாலை முதல் முடக்கப்பட்டுள்ளது.
நல்லூர் அரசடியில் கடந்த ஒரு வாரத்தில் 22 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
அதனால் அரசடியில் வசியும் மக்களை சுயதனிமைப்படுத்துவதுடன் அந்தப் பகுதியை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.


யாழ்ப்பாணம்- நல்லூர் அரசடிப் பகுதி தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் நேற்று மாலை முதல் முடக்கப்பட்டுள்ளது. நல்லூர் அரசடியில் கடந்த ஒரு வாரத்தில் 22 கோவிட்-19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். அதனால் அரசடியில் வசியும் மக்களை சுயதனிமைப்படுத்துவதுடன் அந்தப் பகுதியை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

நல்லூர் ஜே 103 கிராம அலுவலகர் பிரிவில் ஒரு பகுதியான அரசடியை தனிமைப்படுத்துவதற்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மாவட்டச் செயலாளர் ஊடாக கோவிட்-19 நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்தும் செயலணிக்கு யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரியினால் நேற்று காலை கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அதற்கு அமைவாக நேற்று மாலை 6 மணி முதல் அரசடிப் பகுதியைத் தனிமைப்படுத்த சுகாதார மருத்துவ அதிகாரிக்கு அனுமதியளிக்கப்பட்டது.