பக்கங்கள்

பக்கங்கள்

17 மே, 2021

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரனுக்கு தடை உத்தரவு

www.pungudutivuswiss.com
எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை மக்களை ஒன்றுகூட்டி அனுஷ்டிப்பதாகவும், கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தவிருப்பதாகவும் தங்களுக்கு புலனாய்வுத் தரவுகள் கிடைத்ததாவும் தெரிவித்து வாழைச்சேனை காவல் துறை நீதிமன்றத் தடையுத்தரவை வழங்கியதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன் தெரிவித்தார்.



வாழைச்சேனை பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவை தனது இல்லத்திற்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வருகை தந்து கையளித்தனர்.



தங்களுக்கு புலனாய்வுத் தரவுகள் கிடைத்ததால் நீதிமன்றத் தடையுத்தரவை வழங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர் என்றார்.