பக்கங்கள்

பக்கங்கள்

21 ஜூன், 2021

திரைத்துறை தொழிலாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.1 கோடி வழங்கிய ஈழத்தமிழன் சுபாஷ்கரன்

www.pungudutivuswiss.com
தமிழகத்தில் கொரோனா தலைவிரித்தாடும் நிலையில். ஊரடங்கு காரணமாக பல்வேறு துறைகள் முடங்கியுள்ள நிலையில், திரைத்துறை பல கோடி ரூபாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இதனால் திரைப்படத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. ஃபெப்சி என அழைக்கப்படும் தென்னிந்தியத் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு, ஊரடங்கு காரணமாக நெருக்கடியைச் சந்தித்துவரும் திரைப்படத் தொழிலாளர்களுக்கு உதவியளித்து வருகிறது. ஃபெப்சி அமைப்பின் இந்த முயற்சிக்கு கைகொடுக்கும் வகையில், ஈழத் தமிழரான லைக்கா நிறுவுனர் திரு.சுபாஷ்கரன் அல்லிராஜா அவர்கள், 1 கோடி ரூபாவை கொடுத்து உதவியுள்ளார்