பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2021

பிரான்சில் மே 31 ஆம் திகதி முதல் அனைவருக்கும் தடுப்பூசி

www.pungudutivuswiss.com
இன்று திங்கட்கிழமை மே 31 ஆம் திகதியில் இருந்து 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசிகள் போடப்பட்ட உள்ளன.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இன்றுமுதல் தங்கள் பெயர்களை முன்பதிவு செய்துகொள்லலாம். இதுவரை 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மேல் உள்ளவர்களுக்கு மாத்திரமே தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில், இன்றூ முதல் 18 வயதில் இருந்து தடுப்பூசிகள் ஆரம்பிக்கின்றன.
பிரான்சில் மொத்தமாக 22 மில்லியன் பேர் இதற்கு ஏற்புடையவர்களாக உள்ளனர் எனவும், நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 500.000 முன்பதிவுகள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நாள் ஒன்றில் 10.000 இற்கும் குறைவான தொற்று பதிவாகுவதால் தடுப்பூசியை பிற்போடும் எண்ணம் நல்லதல்ல எனவும், நான்காம் தொற்று அலையை தவிர்க்க தடுப்பூசி மாத்திரமே உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.