பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூன், 2021

இங்கிலாந்தில் ஊரடங்கு 4 வாரங்களுக்கு நீடிப்பு!

www.pungudutivuswiss.com
இங்கிலாந்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முன்னர் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் 21-ம் தேதியுடன் முடிவுக்கு கொண்டுவர அரசு திட்டமிட்டிருந்தது.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை கருத்தில் கொண்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.
இங்கிலாந்தில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முன்னர் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை வரும் 21-ம் தேதியுடன் முடிவுக்கு கொண்டுவர அரசு திட்டமிட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை கருத்தில் கொண்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் மேலும் 4 வாரங்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்துள்ளார்.
ஜூலை 19-ம் தேதிக்குப் பிறகே ஊரடங்கில் தளர்வுகள் இருக்கும் என்று போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக போரிஸ் ஜான்சன் கூறுகையில், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவும் சூழலில் இரண்டாவது டோஸ் தடுப்பூசியை மேலும் பலருக்கு செலுத்த அனுமதிக்கும் வகையில் தளர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை மேற்கொண்டு நீட்டிக்க வேண்டிய அவசியம் இருக்காது என்ற நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.