பக்கங்கள்

பக்கங்கள்

9 ஜூன், 2021

பிரான்சில் ஜூன் 9 அடுத்தகட்ட உள்ளிருப்பு தளர்வு

www.pungudutivuswiss.com
கடந்த மே 19 ஆம் திகதி முதல்கட்ட உள்ளிருப்பு தளர்வு தளர்த்தப்பட்ட நிலையில், இன்று ஜூன் 9 ஆம் திகதி இரண்டாம் கட்டமாக சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன.
21.00 மணிக்கு நடைமுறைக்கு வந்த இரவு நேர ஊரடங்கு, இன்று முதல் 23.00 மணிக்கு பிற்போடப்படுகின்றது. 23.00 மணியில் இருந்து காலை 6 மணிவரை இந்த ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்.
உணவகத்தின் முற்றங்களில் (Terrasses) 50% வீதமானவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் ஒரு மேஜைக்கு அதிகபட்சமாக 6 பேர் எனும் கணக்கில் 100% வீதம் இந்த முற்றங்கள் திறக்கப்படுகின்றன.
அருந்தகம் மற்றும் உணவகங்களின் உள்ளக பகுதிகளில் 50% வீதமானவர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
வீட்டில் இருந்தே வேலை செய்யும் (le télétravail) இல் தளர்வு கொண்டுவரப்பட்டுள்ளது.
ஓய்வறைகள், விளையாட்டு அரங்குகள், நீச்சல் தடாகங்கள்., உடற்பயிற்சி கூடத்திற்கு 65% வீதமானவர்களுக்கு அனுமதி.
திருமணம் மற்றும் மதசார்ப நிகழ்வுகளுக்கு அரங்கின் கொள்ளளவில் 65% வீதமானவர்களுக்கு அனுமதி.
விளையாட்டு அரங்குகளில் அதிகபட்சமாக 5.000 பேர் வரை அனுமதி