பக்கங்கள்

பக்கங்கள்

18 ஜூன், 2021

இந்தியத் தூதுவரைச் சந்தித்தது கூட்டமைப்பு

www.pungudutivuswiss.com

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இன்று முற்பகல் 11 மணியளவில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது

இந்த சந்திப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,

பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராசா, தர்மலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இச் சந்திப்பின் போது அதிகாரப்பகிர்வு மற்றும் அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும், குறிப்பாக வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாகவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நேற்று சந்திக்கவிருந்தனர். எனினும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அச் சந்திப்பினை ஒத்தி வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.