பக்கங்கள்

பக்கங்கள்

23 ஜூன், 2021

வதிரியில் மோட்டார் சைக்கிள் விபத்து - இளம் குடும்பத் தலைவர் பலி

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணம்- நெல்லியடி வதிரியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டையிழந்ததால், ஏற்பட்ட விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பின்னிருக்கையில் அமர்ந்து சென்றவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.


யாழ்ப்பாணம்- நெல்லியடி வதிரியில் மோட்டார் சைக்கிள் ஒன்று வேகக்கட்டுப்பாட்டையிழந்ததால், ஏற்பட்ட விபத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். பின்னிருக்கையில் அமர்ந்து சென்றவர் படுகாயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று இரவு 7 மணியளவில் இடம்பெற்றதாக நெல்லியடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் பருத்தித்துறையைச் சேர்ந்த வீரவாகுப்பிள்ளை கெங்கேஸ்வரன் (வயது-32) என்பவரே உயிரிழந்துள்ளார். அவரது சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.