பக்கங்கள்

பக்கங்கள்

27 ஜூன், 2021

தொழிலில் தோழர் மும்முரம்

www.pungudutivuswiss.com
கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பூவரசன் தீவில் எவ்வித அனுமதியும் இன்றி, இலங்கை – சீன கூட்டு நிறுவனம் ஒன்று அட்டைப் பண்ணை ஒன்றை ஆரம்பித்துள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் கௌதாரிமுனை – பூவரசன் தீவு இலங்கையில் அருங்கொடைகளைக் கொண்ட ஓர் தீவாகும்.

இங்கு கடல் அட்டை பண்ணையை மேற்கொள்ள இங்குள்ள மக்கள் பல தடவைகள் கோரியும் அதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனினும் தற்போது சீனர்கள் அட்டைக் குஞ்சுகளை இங்கு விட்டுள்ளதாகவும் இவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இது தொடர்பில் நாம் தேசிய நீர் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையிடம் வினவியபோது இலங்கை – சீன கூட்டு நிறுவனம் ஒன்று எவ்வித அனுமதியும் இன்றி இங்கு அட்டைக் குஞ்சுகளை விட்டு பண்ணையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்தது