பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூலை, 2021

சுவிசில் இருந்து வழிநடத்தப்பட்ட முல்லைத்தீவு வாள்வெட்டுதாக்குதல்

www.pungudutivuswiss.com
முல்லைத்தீவு - செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதலை நடத்தி, கார் ஒன்றைத் தீயிட்டு எரித்த சம்பவம் தொடர்பில் 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு - செல்வபுரத்தில் வீடொன்றுக்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதலை நடத்தி, கார் ஒன்றைத் தீயிட்டு எரித்த சம்பவம் தொடர்பில் 6 பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுவிஸில் இருந்து ஆவா குழுவைச் சேர்ந்த ஒருவர் பணம் அனுப்பி இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் என்று சந்தேக நபர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

நவாலியைச் சேர்ந்த மூவரும் புத்தூரைச் சேர்ந்த மூவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஆறு பேரும் முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முற்படுத்தப்படவுள்ளார்கள். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.