பக்கங்கள்

பக்கங்கள்

15 ஜூலை, 2021

கொள்ளை, கடத்தலுடன் தொடர்புடைய இரு தமிழர்களை தேடுகிறது ரொறன்ரோ பொலிஸ்

www.pungudutivuswiss.com
கொள்ளை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு தமிழர்களைத் தேடுவதாக ரொறன்ரோ பொலிசார் அறிவித்துள்ளனர்.


கொள்ளை மற்றும் கடத்தல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு தமிழர்களைத் தேடுவதாக ரொறன்ரோ பொலிசார் அறிவித்துள்ளனர்.

ஜனவரி 30ஆம் திகதி மார்க்கம் வீதி பகுதியில், மக்நிகோல் அவென்யூவில் வர்த்தக நிலையம் ஒன்றில் இருந்து பலவந்தமாக ஒருவரைக் கடத்திச் சென்று, தாக்கி, பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்ட சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் ரொறன்ரோ பொலிசார், தேடப்படும் இருவர் குறித்து தகவல் வெளியிட்டுள்ளனர்.

42 வயதுடைய மார்க்கம் பகுதியை சேர்ந்த ராம்நாராஜ் ராஜரட்ணம், ரொறன்ரோவை சேர்ந்த கோகுலநாதன் ஐயாத்துரை ஆகியோர் பற்றிய தகவல்களை தருமாறும் அவர்கள் கோரியுள்ளனர்.