பக்கங்கள்

பக்கங்கள்

16 ஜூலை, 2021

ரித்தானியாவில் அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களை தனிமைப்படுத்திக்கொள்ள உத்தரவு

www.pungudutivuswiss.com
இங்கிலாந்து மற்றும் வேல்சில் மொத்தமாக அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களுக்கு உடனே தனிமைப்படுத்திக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, பொதுமக்கள் NHS கொரோனா செயலியை பான்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், ஜூலை 7 வரையான ஒரு வார காலத்தில் மட்டும் மொத்தமாக 530,126 பேர்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்ள அந்த செயலியில் இருந்து எச்சரிக்கை சென்றுள்ளது.

இதில் இங்கிலாந்தில் 520,194 பேர்களும், வேல்சில் 9,932 பேர்களும் தனிமைப்படுத்த எச்சரிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஜனவரிக்கு பிறகு ஒரு வார காலத்தில் அதிகபட்ச எண்ணிக்கை என தெரிய வந்துள்ளது.

இந்த தனிமைப்படுத்துதல் எச்சரிக்கையால், தொழில் முடக்கம் ஏற்பட்டுள்ளதாக பல நிறுவனங்கள் தற்போது புகார் அளிக்க தொடங்கியுள்ளனர்.

தனிமைப்படுத்திக்கொள்ள எச்சரிக்கப்பட்டவர்களின் பட்டியலில் பிரபல பிரித்தானிய பாடகர் Ed Sheeran கூட உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.